சென்னை: ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் சி.ஏ., நிறுவன செயலர் மற்றும் ஐ.சி.டபிள்யூ.ஏ., தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, தமிழக அரசின் தாட்கோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) நிர்வாக இயக்குநர் கே.எஸ். கந்தசாமி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் தாட்கோ இணைந்து 100 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சிஏ–இடைநிலை, நிறுவனச் செயலர்– வழங்கியுள்ளது. இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை-இடைநிலைப் பயிற்சி, தேர்வுகள், பயிற்சி பெற விரும்பும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பி.காம் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஓராண்டு பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.