சென்னை: காசி தமிழ் சங்கத்தை முன்னிட்டு சென்னை, கோவை, கன்னியாகுமரியில் இருந்து பனாரஸ் நகருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காசி தமிழ் சங்கமம் 3-ம் ஆண்டு விழா, பிப்., 15 முதல், 24 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க வசதியாக, சென்னை சென்ட்ரல் – பனாரஸ் இடையே, பிப்., 13-ல் சிறப்பு ரயில் (ரயில் எண்: 06193) இயக்கப்படுகிறது.
பனாரஸில் இருந்து சென்னைக்கு பிப்., 19-ம் தேதி சிறப்பு ரயில் (ரயில் எண். 06194) இயக்கப்படுகிறது. இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து பனாரஸுக்கு பிப்.19-ம் தேதி (06153), மறுபுறம் பனாரஸில் இருந்து சென்னைக்கு (06154) பிப். 24-ம் தேதி மற்றொரு ரயில் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி-பனாரஸ் இடையே பிப்ரவரி 13-ம் தேதியும், பனாரஸில் இருந்து பிப்ரவரி 2-ம் தேதியும் சிறப்பு ரயில் (06195) இயக்கப்படும்.
மற்றொரு ரயில் பிப்ரவரி 17-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பனாரஸுக்கும் (06163) பிப்ரவரி 23-ம் தேதி பனாரஸிலிருந்து கன்னியாகுமரிக்கும் இயக்கப்படும். கோயம்புத்தூர்-பனாரஸ் இடையே பிப்ரவரி 16-ம் தேதியும், பனாரஸில் இருந்து பிப்ரவரி 22-ம் தேதியும் சிறப்பு ரயில் (06187) இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.