பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜன., 14 முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, சென்னையில் இருந்து வழக்கம்போல் இயக்கப்படும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு முடிவடைந்தது. இதையடுத்து, சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிக்கப்படும் என பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும், கடைசி நேரத்தில் சிறப்பு ரயில்களை அறிவிக்காமல், முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “பயணிகளின் கோரிக்கை ஆய்வு செய்யப்பட்டு, தாம்பரம்-நெல்லை, நெல்லை-தாம்பரம்-கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை இயக்க நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல்-மானாமதுரை, எழும்பூர்-திருச்சி எனவே, ஓரிரு நாளில் அனுமதி கிடைத்த பின், சிறப்பு ரயில்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.