சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு பார் மோதல் சம்பவம், தற்போது தமிழக அரசியலும், சினிமா உலகையும் அதிரவைத்துள்ளது. இந்த மோதல் வழக்கில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்ததையடுத்து, அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் கோக்கைன் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்தின் கைரேகையில் 50 கிராம் போதைப்பொருள் தூள்கள் மற்றும் அவரது வீட்டில் ஒன்பது காலியான கோக்கைன் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், தனது வாக்குமூலத்தில் பிரசாத் தான் இயக்கிய படத்தில் நடித்ததாகவும், சம்பளமாக தர வேண்டிய 10 லட்சம் ரூபாயுக்குப் பதிலாக போதைப்பொருள் வழங்கியதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இது மூன்று முறைகள் பயன்படுத்திய பின் தான், போதைப்பொருளுக்கு அடிமையானதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் மேலும் பல முக்கிய நபர்கள் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர். விசாரணையில், நடிகர் கிருஷ்ணாவும் தொடர்புடையவராக இருந்தது தெரியவந்ததால், அவரை தொடர்புகொண்டு விசாரணைக்கு வருமாறு தெரிவித்தனர். ஆரம்பத்தில், கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாகக் கூறிய கிருஷ்ணா, தற்போது தனது செல்போனையும் அணைத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் நடிகர் கிருஷ்ணாவை தேட போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகத்திலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிக்கனமும், சினிமா பிரபலங்களின் சமூகப் பொறுப்பையும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது.