சென்னை: இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பளரான சுதர்சன் ரெட்டியை நக்சல் என விமர்சித்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கூறியதாவது: “தீவிரவாதிகளையும், நக்சல்களையும் ஒழிக்க முடியாதவர் அமித்ஷா. அவர் தான் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் தவறி வருகிறார். ஆனால் நீதித்துறையிலும் அரசியலமைப்புச் சட்டத்திலும் பெரிய பங்களிப்பு செய்த சுதர்சன் ரெட்டியை விமர்சிப்பது முற்றிலும் பொருத்தமற்றது” எனக் குற்றம்சாட்டினார்.
ஏற்கெனவே இந்த குற்றச்சாட்டை பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளன. சுதர்சன் ரெட்டி போன்ற சட்ட நிபுணர், அரசியலமைப்பு காவலராகத் திகழ்ந்தவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டு வைக்கப்படுவது இந்தியா கூட்டணியின் வேட்பாளரை அவமதிப்பதற்காக மட்டுமே என அவர்கள் கூறி வருகின்றனர்.
வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நடந்துவரும் இவ்வாறான சர்ச்சைகள், போட்டியை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.