2026 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரீஷ் ராமன் 2026 ஆண்டிற்கான கணிப்பை வெளியிட்டுள்ளார். அவரது கணிப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் இருவருக்கும் அரசியல் நிலைநாட்டில் நல்ல நேரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

திருச்சி, கரூர், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஜனவரி மாதம் வரை அரசியல் சூழல் கடுமையாக இருக்கும். சனி வக்கிரம் மற்றும் சூரியன் இணைவு காரணமாக அரசியல் மாற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், டிசம்பர் முதல் பிப்ரவரி 15 வரை மழை, பூகம்பம் போன்ற இயற்கை நிகழ்வுகள் சில பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் எதிர்பாராத சம்பவங்கள், அரசு நடவடிக்கைகள் மற்றும் கல்வி/சீருடை பணியாளர்கள் சம்பவங்களில் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் குரு உச்சம் பெற்றபின் எதிர்மறை சம்பவங்கள் குறையும், அதற்குமுன் பிரச்சனைகள் இருக்கும்.
ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் 2026 தேர்தலில் கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் செவ்வாயின் ஆதிக்கம் காரணமாக இளைஞர்கள் ஆதரவு அதிகம் கிடைக்கும். இருவருமே அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற வாய்ப்புள்ளது; விஜய் எதிர்க்கட்சித் தலைவர் ஆகும் வாய்ப்பும் இருப்பதாக ஜோதிடர் கணித்து உள்ளார்.