ஊரணிபுரம் : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதம்பை (வடக்கு) கிராமத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் காயத்ரி தலைமை வகித்தார். திமுக திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.
இதில், திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி வில்லியம் பாஸ்டின், ஆர்.சாமிநாதன், திமுக அவைத்தலைவர் கே.கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், பல்வேறு துறை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பயனாளிகளை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர். மருத்துவப் பயனாளி ஒருவருக்கு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
தேவையானவர்களுக்கு இசிஜி, எக்கோ, சளி, ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 432 மருத்துவப் பயனாளிகள் கலந்து கொண்டனர். 52 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்