சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் அயன்புரம் கே. சரவணன், கட்சியின் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு சாட்டப்பட்டதால், அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அமைப்புச் செயலாளர் ராம் மோகன் வெளியிட்ட அறிக்கையில், சரவணன் சமூக ஊடகங்களில் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து வெளியிட்டது கட்சியின் கண்ணியத்தையும் நன்மதிப்பையும் சீர்குலைக்கும் செயல் என்றும், இது கட்சி கட்டுப்பாட்டை மீறியது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை காங்கிரஸ் ஒழுங்கு விதிகளின்படி எடுக்கப்பட்டதாகவும், இனி இதுபோன்ற ஒழுங்குமீறல்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி எச்சரித்துள்ளது.