சென்னை: முதலீடு இல்லாவிட்டால் கூட, மாதா மாதம் சம்பளத்தினைக் கொண்டு நாட்களை நகர்த்த முடியும். காப்பீடு இல்லையெனில், திடீர் செலவின் போது, பெரும் கடனில் மாட்டிக் கொள்ள நேரிடும். எனவே காப்பீடு என்பது மிகவும் முக்கியமானது.
பயணம் செல்ல ஒருவர் வாகனம் வாங்குகிறார் என்றால், வாகனம் மூலமாக நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க முடியுமென்றாலும், தலைக்கவசம் இல்லாவிட்டால், ஏதேனும் விபத்து நேர்ந்தால், வாகனம் மட்டுமல்ல, வாகனம் ஓட்டுபவரின் உயிரையும், அவரது பிரதானமான தலையையும் காப்பது தலைக் கவசமே. அதேபோல்தான் காப்பீடானது, தனிமனித நிதி என்ற பயணத்தில் விபத்துக்கள் நேர்ந்தால் இத்தனை நாள் சேமித்த, பெருக்கிய செல்வத்தினை காக்க உதவுகிறது.
குறைந்த பணத்தில் அதிக பாதுகாப்பினைக் காப்பீடு அளிக்கிறது. காப்பீடானது ஒருவர் தாங்கும் அளவை விட, பெரிய செலவுகளை எளிதில் சமாளிக்க உதவுகிறது. இதன் மூலம், திடீரென ஏற்படும் பெரும் செலவுகளை எளிதில் சமாளிக்க உதவுகிறது. யாரிடமும் கையேந்தாமலும், மேலும், இது வரை சேமித்த, முதலீட்டு பணத்தினை எடுக்காமலும், கையாள உதவுகிறது.
காப்பீடு இல்லையெனில், இதுவரை செய்த சேமிப்பு, முதலீட்டு முயற்சிகள் வீணாகி, மறுபடியும் அடிப்படையிலிருந்த தொடங்க நேரிடும் அல்லது கடனாளி ஆக நேரிடும். இருசக்கர வாகனம் ஓட்டுபவர் வருடம் 800 ரூபாய் கட்டினால், அவருக்கு கிடைக்கும் காப்பீடானது, சேதமான அவரது வாகனத்திற்கு திரும்பும் வாங்குமளவிற்கு, நல்லதொரு தொகை தருகிறது. மேலும், மூன்றாவது நபரின் சொத்துக்களின் பாதிப்பிற்கு 7.5 லட்ச ரூபாய் வரை நஷ்ட ஈடு தருகிறது. வாகனம் ஓட்டுபவரின் விபத்து காப்பீடு 15 லட்சம் வரை கிடைக்கிறது. எனவே காப்பீடு எப்போதும் கை கொடுக்கும். காப்பீடுதான் எப்போதும் சிறந்தது ஆகும். மேலும் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று காப்பீடு பற்றி அறிந்து கொள்ள: 9600999515