சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் 30ம் தேதி அன்று மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் தரைக்காற்று வீசக்கூடுமென வானிலை மையம் கூறி உள்ளது.
இதே போன்று 30 ஆம் தேதி அன்று வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடுமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.