கடலூர் : கடலூர் மாவட்டத்தில் ரயில் மோதி பள்ளி வேனில் சென்ற மூன்று மாணவர்கள் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது
கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பலியான குழந்தைகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பலியான சாருமதி, செழியன் (அக்கா, தம்பி) ஆகியோரின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
அமைச்சர் எம்.ஆர்.கே . பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளையும் இழந்தது மரணத்தை விடவும் கொடியது.
இந்நிலையில் வேன் விபத்துக்குள்ளான தனியார் பள்ளிக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விபத்துக்குள்ளான வேனில் உதவியாளர் இல்லாதது தெரிய வந்துள்ளது. ஆனால், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் உதவியாளர் இருக்க வேண்டியது கட்டாயம்.
உதவியாளர் இல்லாமல் வேனை இயக்கியது ஏன் என விளக்கம் கோரப்பட்டுள்ளது.