டெல்லி: விவசாய குளிர்பதன கிடங்குகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நாடு முழுவதும் காய்கறிகளை சேமிக்க குளிர்பதன கிடங்கு அமைக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் மூலதன முதலீட்டு மானியம் குறித்து மக்களவையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், தமிழகத்தில் தற்போதுள்ள குளிர்பதனக் கிடங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் சேமிப்புத் திறன் ஆகியவற்றை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்டுமானம், விரிவாக்கம், குளிர்பதனக் கிடங்கு வசதிகளை நவீனப்படுத்துதல் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களுக்கான மூலதன முதலீட்டு மானியம் என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்-இணைக்கப்பட்ட மானியம், தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் தொடர்புடைய குளிர்பதனக் கிடங்குகள் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை வெளியிட கோரியுள்ளனர்.