சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணி நடைபெற உள்ளதால், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே நாளை (ஜனவரி 5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பயணிகள், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் போக்குவரத்துக்கு மின்சார ரயில் சேவை பெரும் உதவியாக உள்ளது. இந்த மின்சார ரயில் சேவையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே தினமும் ஏராளமான வியாபாரிகள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர, பீக் ஹவர்ஸில் சென்னை மின்சார ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டாலும், சென்னை முழுவதும் ஸ்தம்பித்துவிடும் என்று யாரும் வருத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது. மின்சார ரயில் சேவை மிகவும் அவசியம். கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உட்பட பலர் மின்சார ரயில் சேவையை நம்பி உள்ளனர். சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்களில் சீரான இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் ரயில் சேவையை குறைவாகவே பயன்படுத்துகின்றனர். இதனால், ரயில் சேவையும் குறைவாக இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மின்சார ரயில் சேவையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக வாரந்தோறும் இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தாம்பரம் டெப்போவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், நாளை சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே நாளை (ஜனவரி 5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் தரைப்பாலத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நேரத்தில் பல்லாவரம் – கடற்கரை மற்றும் செங்கல்பட்டு – குடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதற்கிடையில், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் 11:00 மணி வரை அட்டவணைப்படி இயக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மேல் வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும். எனவே, புதுப்பிக்கப்பட்ட நேரங்களுக்கு ஏற்ப பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.