சென்னை: சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் டிஜிட்டல் டெபாசிட் வசதியை அறிமுகம் செய்துள்ளது. சுந்தரம் ஃபைனான்ஸ் நாட்டின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் நிதிப் பாதுகாப்புக்கு பெயர் பெற்றது. இந்நிறுவனத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெபாசிட் செய்துள்ளனர்.
இந்நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிஆர்ஏ மற்றும் கிரிசில் ஆகியவற்றால் ஏஏஏ மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் டிஜிட்டல் டெபாசிட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் தங்கள் வீட்டில் இருந்தபடியே நிறுவனத்தின் இணையதளம் அல்லது எஸ்எஃப் நெக்ஸ்ட் என்ற ஆப் மூலம் முதலீடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இது முதலீட்டை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் முடியும்.