தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 20 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க உள்ளார். இதற்கு தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கியுள்ளது. விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டிலேயே பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.
தற்போது, போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்க நேரில் செல்ல உள்ளார் விஜய். கட்சியின் முதல் மாநாட்டில் திமுகவை தனது அரசியல் எதிரியாக அறிவித்த விஜய், கள அரசியலின் முதல் படியிலும் திமுகவை எதிர்த்தே பயணத்தை தொடங்கியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராகவும், டங்ஸ்டன் எதிர்ப்பு உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய்யின் பரந்தூர் பயணம் அரசியல் மக்களுக்கு கவர்ச்சியாகத் தெரிய வருகிறது. பரந்தூர் விமான நிலைய போராட்டம் 900 நாட்களுக்கு மேல் நீடித்து வருகிறது. ஆனால், இந்த போராட்டம் பெரும் அளவில் பேசப்படவில்லை. இந்நிலையில், விஜய் நேரடியாக போராட்டக் களத்திற்கு செல்ல இருக்கின்றார் என்பதால், ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனமும் பரந்தூர் விமான நிலையம் பக்கம் திரும்பும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விஜய்யின் அரசியல் பயணம், குறிப்பாக கள அரசியலுக்கு அவர் முன்னோடியாகச் செல்லும் இந்த நடவடிக்கை, அவரது அரசியல் கிரேசை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விஜய் அரசியலில் நுழையாததாக விமர்சித்து வந்தனர், ஆனால் தற்போது அவர் நேரடியாக போராட்டங்களில் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக வலுவான பங்கு வகிக்கின்றார்.
இதன் மூலம் திமுக அரசுக்கு பின்னடைவு ஏற்படக் கூடும் என்று கூறப்படுகின்றது. மேலும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், சட்ட ஒழுங்கு பிரச்சனை, பரந்தூர் விமான நிலைய விவகாரம், டாஸ்மாக் உள்ளிட்டவற்றால் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில் விஜய்யின் கள அரசியல் ஆரம்பம், திமுகவுக்கு எதிரான பிரச்னைகளை மேலும் பெருக்கி, அவருக்கு ஆதரவு பெருகும் என எண்ணப்படுகிறது.