சென்னை: பெண் பத்திரிகையாளர் வழக்கில் சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில் எஸ்.வி.சேகர் ஜூலை மாதம் வரை சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எஸ்.வி.சேகர் சரணடைவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டித்து மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவாகரத்தில் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க தயார் என அவர் கூறியதை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அது மட்டுமின்றி, இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரையும் சேர்த்து தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.