திருச்செந்தூர் : திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியுள்ளது.
அப்போது, ₹100 கட்டண வரிசையில் நின்றிருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் (50) மூச்சுத்திணறி கீழே சரிந்தார். மருத்துவமனை அழைத்துச் சென்றதில் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதி முழுவதும் மக்கள் மத்தியிலும் பக்தர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.