சென்னை: “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஒரு வாரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும் போதுமானதாக இருக்க வேண்டும். அதன்படி, முற்போக்கான நடவடிக்கைகள் அவசியம்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். உறுதியற்ற மற்றும் மூடப்படாத மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை தேவை.
மழையால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் தங்குமிடம், சுகாதார வசதிகள் உள்ளிட்டவை தற்காலிகத் தேவையாகும்.
மேலும் பொதுமக்களின் குடிநீர் தரம் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்கால நோய்கள் பரவாமல் மக்களைப் பாதுகாக்க நோய்த்தடுப்பு உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
எனவே, வடகிழக்கு பருவமழையால் மக்கள் பாதிக்கப்படாத வகையில், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் தொடர்ந்து ஈடுபட வேண்டும்,” என்றார்.