சென்னை: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணியினர் வெள்ளிக்கிழமை (ஆக.16) மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 66 இடங்களில் மவுன ஊர்வலம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 16ம் தேதி நாடு. தொடர்ந்து அந்தந்த மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மவுன ஊர்வலம் நடத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
ஆனால், தமிழக காவல்துறை மெழுகுவர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து, அந்தந்த மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் பயிற்சி மருத்துவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். சென்னை கோடம்பாக்கம் அஜீஸ் நகரில் மாநில செயலாளர் பிரமிளா சம்பத் தலைமையில் மகளிரணி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் நுங்கம்பாக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் சென்னையில் 6 இடங்களில் பாஜக மகளிரணி நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் மகளிர் அணி மூத்த நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.