பல்லாவரம்/காஞ்சிபுரம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழகம் வளர்ந்துள்ளதாக கூறியுள்ளார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:- தமிழ் 5,500 ஆண்டுகளுக்கு முன்பே தொன்மையான மொழி என்பதை ஆய்வு மூலம் நிரூபித்துள்ளோம். தமிழகம் அனைத்து வகையிலும் வளர்ந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக வளர்ந்துள்ளது. உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கையில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மருத்துவம், கல்வி, சமூக நலத்துறையில் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் சக்திவாய்ந்த விளையாட்டு மையமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. மக்களுக்கான மருத்துவத்துக்காக ஐ.நா அமைப்பின் விருது பெற்றுள்ளோம். தமிழகத்தில் 2.2 சதவீதம் பேர் ஏழைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய சராசரியான 14.9 சதவீதம் மிகவும் குறைவு. இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலும் ஒழிக்க தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதால், தமிழகத்தில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் 41% பெண்கள் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடி தனியார் முதலீட்டை கொண்டு வந்துள்ளோம். தமிழகம் இப்படி வானளாவி வளர்ந்து வருகிறது. மேலும் உயர்ந்து எல்லாவற்றிலும் வெற்றி பெறுவோம். மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு முதல்வர் பேசினார். அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மேட்டுத் தெரு பகுதியில் உள்ள திமுக நகர அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சன்பிரான்ட் ஆறுமுகம் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.