சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி, கோயம்பேடு பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை பூ மார்க்கெட்டில் கனகாம்பரம், சாமந்தி, சம்பங்கி, அரளி பூ, சாக்லேட் ரோஸ், பன்னீர் ரோஸ் போன்ற பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ மல்லிகை ரூ. 500, ஐஸ் ஜாஸ்மின் ரூ. 300 முதல் ரூ. 400, மல்லிகை மற்றும் மல்பெரி ரூ. 300 முதல் ரூ. 400, கனகாம்பரம் ரூ. 500 முதல் ரூ. 800, சாமந்திப்பூ ரூ. 180 முதல் ரூ. 240, சம்பங்கி ரூ. 150 முதல் ரூ. 200, அரளி பூ ரூ. 300 முதல் ரூ. 500, சாக்லேட் ரோஜா ரூ. 120 முதல் ரூ. 180 ஆகவும், பன்னீர் ரூ. 100 முதல் ரூ. 140-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், “தமிழ் புத்தாண்டையொட்டி பூக்கள் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் கனகாம்பரம் சாமந்தி, சம்பங்கி, அரளி பூ, சாக்லேட் ரோஜா, பன்னீர் ரோஜா பூக்கள் விலை உயர்ந்துள்ளது. சற்று குறைந்துள்ளது, என்றார்.