சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காகவே நடிகர் அஜித்துக்கு திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாரா? என தமக்கு தெரியவில்லை என தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், அனைத்து மக்களும் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் தேவர் திருமகனார் மகிழும் அளவுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம் எனக் கூறியுள்ளார்.
ஆன்மீகமும் அரசியலும் எனது இரு கண்கள் என்றார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆன்மீகமும் அரசியலும் கலக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார்.. அஜித்துக்கு வாழ்த்துச் சொன்னால் விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக சொன்னாரா? என எனக்கு தெரியவில்லை என்றார் தமிழிசை.
பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு, உலகளாவிய 24H Dubai 2025 மற்றும் The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அஜித்குமார் ரேசிங் யூனிட்டின் கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் SDAT Logo-வை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வாழ்த்திய அஜித் சாருக்கு அன்பும் நன்றியும் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும் கூறினார்.
கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள் அஜித் சார் என்று பதிவு செய்துள்ளார்.