இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கிறிஸ்துவ புனித வெள்ளி விழா ஏப்.18-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும், 20-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
இடையில் விடைத்தாள் திருத்தும் பணி இதனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விழா கொண்டாட முடியாத நிலை உள்ளது. இதை உணர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விழாவை சிறப்பாக கொண்டாட உதவும்.

மேலும், மற்ற ஆசிரியர்களும் தங்கள் தொடர்ச்சியான பணிகளுக்கு இடையில் ஒரு சிறிய இடைவெளியைப் பெறுவார்கள். வரும் நாட்களில் புத்துணர்ச்சியுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவை வழிவகுக்கும். எனவே, விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு ஏப்ரல் 19-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.