சென்னை: தமிழகத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று 5 மாவட்டங்களில் 102 டிகிரி செல்சியஸ் பதிவானது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னை, கடலூர், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஈரோடு, வேலூர், திருச்சி, மதுரை, கரூர் மாவட்டங்களில் நேற்று வெயில் 102 டிகிரியை எட்டியது. மேலும், தஞ்சாவூர், திருத்தணி, சேலத்தில் 100 டிகிரியும், பாளையங்கோட்டை, நாகப்பட்டினத்தில் 99 டிகிரியும், சென்னை, கடலூரில் 97 டிகிரியும் பதிவானது. தொடர்ந்து, வரும் 14-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும்.