சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் செப்டம்பர் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றைய அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 35.6-39.2 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இயல்பை விட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 100-102 டிகிரி வரை இருக்கலாம்.
தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை மற்றும் விமான நிலையத்தில் அதிகபட்சமாக தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதையடுத்து ஈரோட்டில் 103, அதிராமபட்டினம், சென்னை மீனம்பாக்கம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, தஞ்சாவூரில் தலா 102, கரூர் பரமத்தி, திருச்சியில் தலா 101, சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், வேலூரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
இதேபோல் காரைக்காலில் 101 டிகிரி ஃபாரன்ஹீட்டும், புதுச்சேரியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.