பூந்தமல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு அலுவலகங்களில், ஒப்பந்ததாரர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், பல்வேறு பணிகளுக்கு, அரசு அலுவலர்கள், ஊழியர்கள் லஞ்சமாக லஞ்சமாக பெறுவதாக வெளியான தகவலையடுத்து, தமிழகம் முழுவதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வகையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழரசி உள்பட 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை பூந்தமல்லி பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு உள்ளிட்ட அனைத்து துறை அறைகளிலும், அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள், கார்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
இரவு 10 மணியளவில் நகராட்சி அலுவலக உதவியாளர் சரத் வலிப்பு காரணமாக மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். தகவல் கிடைத்ததும், 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், வலிப்பு வந்தவருக்கு, ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள், உடல்நிலை சீராக உள்ளதால், மாத்திரைகள் கொடுத்தனர்.
இதனிடையே நேற்று அதிகாலை 3 மணி அளவில் அதிகாலை சோதனை முடிந்தது. இதில், பேரூராட்சி நகரமைப்பு பிரிவில் ரூ.1.66 லட்சம், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.34,700, கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 700 என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் நகர் ஊரமைப்பு பிரிவு அலுவலர்கள் ராஜ்குமார், குமரவேல், ஊழியர் சரத்பாபு ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று மதியம் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் லதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல இடங்களில் நேற்று காலை வரை தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இதில், சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலக இடைத்தரகர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.33.50 லட்சம் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.