திருச்சி: திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன்பின், எரிபொருள் தீரும் வரை விமானம் வானில் வட்டமடித்து திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
இந்நிலையில் விமானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் பொதுமக்கள் விமானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
செயல்தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். தரையிறங்கும் பிரச்சனை குறித்து எனக்கு தகவல் கிடைத்ததும், உடனடியாக அதிகாரிகளுடன் தொலைபேசியில் அவசர கூட்டத்தை அழைத்து, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு வலியுறுத்தினேன்.
அனைத்து பயணிகளின் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்குத் தேவைப்படும் மேலும் உதவிகளை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் நான் இப்போது கேட்டுக் கொண்டுள்ளேன். விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுக்கள்!” அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுமார் 6 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு, பயணிகள் மற்றொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஷார்ஜா புறப்பட்டுச் சென்றனர். அதில் 109 பயணிகள் பயணம் செய்தனர்.
அச்சம் காரணமாக 35 பயணிகள் பயணத்தை தவிர்த்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.