நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ.810 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைக்க வருகை தந்த செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி பள்ளூர் புதன்சந்தை பகுதியில் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கலைஞர் சிலை திறப்பு நாமக்கல் பரமத்தி சாலையில் திமுக கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு 8 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார்.
பின்னர் அங்கிருந்து காரில் நாமக்கல் வந்தடைந்தார். திமுகவினரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கலைஞர் சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல்லில் ரூ.664 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பொம்மக்குட்டைமேட்டில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமை வகிக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.366 கோடி மதிப்பிலான 140 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், ரூ.298 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 134 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து 16,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், ரூ.114 கோடியில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் மாநகராட்சி டாக்டர் கல்யாண் நூற்றாண்டு பேருந்து நிலையம், மூலைப்பட்டியில் ரூ.19.50 கோடியில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி, விடுதி, பள்ளிக் கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாமக்கல்லில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.89 கோடியில் புதிய நவீன பால் ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.52 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள், 96 கட்டிட பணிகள், இணைப்பு சாலைகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மதிவேந்தன், ராஜேந்திரன், எம்.பி.க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.