காரை ஓட்டி பள்ளிக்கு செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்ட டிரைவர் மலையப்பன், வாகனத்தில் இருந்த மாணவர்களை காப்பாற்றுவதற்காக சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு இறந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று அவருக்கு முதல்வர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது உயிரிழந்த டிரைவர் மலையப்பனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்றி உயிரை மாய்த்துக் கொண்ட தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் மலையப்பன் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் தனியார் பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ஓட்டுநர் மலையப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்த அனைத்து குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓட்டுநர் மலையப்பன் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.