நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் இன்று (அக்.4) காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அது சரி செய்யப்பட்டு, இன்று (அக்.4) காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
தற்போது 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், இன்று மாலைக்குள் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.