சென்னை: கேமரா, எஸ்ஓஎஸ் பொத்தான், நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய எக்ஸ்பிரஸ் பஸ்கள் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்குவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு விடப்பட்ட டெண்டர் அடிப்படையில் 50 விரைவு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தபிரியன் காமராஜ் கூறியதாவது:- நாளுக்கு நாள் தனியார் பேருந்துகளுக்கு இணையான நவீன வசதிகளை எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பெற்று வருகின்றன. அதன்படி, விரைவுப் பேருந்துகளில் தானியங்கி தீயை அணைக்கும் அமைப்பு முன்னுரிமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பஸ்சுக்குள் சிறிதளவு புகை தென்பட்டாலும் அலாரம் அடிக்கும்.

தீப்பிடித்தால், டிரைவர் பட்டனை அழுத்தியவுடன் ரசாயனங்களைப் பயன்படுத்தி தீ அணைக்கப்படும். தீ அதிகமாகப் பரவினால், ஓட்டுநர் எதிர்பார்க்காமல் தீயணைப்பு அமைப்பு செயல்படும். முன்பு எஞ்சினில் மட்டுமே இருந்த இந்த அமைப்பு தற்போது பயணிகள் பெட்டியிலும் நிறுவப்பட்டுள்ளது. வாகனத்தை பின்னோக்கி இயக்கும் வகையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அனைத்து இருக்கைகளின் அருகிலும் எமர்ஜென்சி பட்டன் (எஸ்ஓஎஸ்) மற்றும் ரீடிங் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏப்ரல் மாத இறுதிக்குள் 29 ஏசி பஸ்களும், 21 ஏசி அல்லாத பஸ்களும் இயக்கப்படும்.