சென்னை: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக, நடப்பு கல்வியாண்டிலிருந்து (2025 – 26) 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்றும், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டிலிருந்து 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. 2017-18 கல்வியாண்டிற்கு முன்பு இருந்த அதே நடைமுறையே பின்பற்றப்படும்.

தற்போது 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு கல்வியாண்டிலிருந்து 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும், 12-ம் வகுப்புக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.