பெற்றோர்கள் சொத்துகள் பெண்களுக்கு உரிமையா? தாயின் சொத்துகளை அவருக்கு விருப்பமான யாருக்கேனும் உயில் அல்லது செட்டில்மென்ட் வழியாக தந்துவிட முடியும். ஆனால் எந்தவொரு சட்ட ஆவணமும் இல்லாமல் தாய் இறந்துவிட்டால், வாரிசுகள் — மகன், மகள் ஆகியோருக்கே சொத்து செல்லும். தாய் சுயமாக சம்பாதித்த சொத்துக்களில், அவர் உயில் எழுதி விட்டால், மகளுக்கு பங்கு கிடையாது. உயில் இல்லாமல் இருந்தால், வாரிசுரிமை அடிப்படையில் மகளுக்கும் உரிமை உண்டு.

அதேபோல், தாய் தனது பெற்றோரிடமிருந்து வந்த சொத்துகளை தனியாக தராமல் இறந்துவிட்டால், அந்த சொத்தில் மகளும் உரிமை கோரலாம். இது வாரிசுரிமையின் கீழ் வரும் உரிமையாகும். ஆனால் தாயின் சொத்து அவர் தனிப்பட்ட சொத்து என்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டால், சட்டப்படி மகளுக்கு உரிமை கிடையாது. எனினும், பல சந்தர்ப்பங்களில், நீதிமன்றத்தின் வழியாக உரிமையை நிலைநாட்ட முடியும்.
தாத்தாவின் சொத்துகள், அவருடைய மகனுக்குதான் முதலில் செல்லும். அப்பாவுக்கு பிறகு, அவர் உயிருடன் இல்லாத சூழ்நிலையில், தான் அவரது வாரிசாக இருப்பதை நிரூபித்து, பேரனுக்கு உரிமை கிடைக்கலாம். ஆனால் தாத்தா உயில் எழுதி விட்டால், அவருடைய சொத்துகள் யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதை எதிர்க்க முடியாது. உயில் இல்லாத பட்சத்தில், வாரிசுரிமை அடிப்படையில் சொத்துகள் பிரிக்கப்பட வேண்டும். இதில் பாட்டி, மகன்கள், மகள்கள், அவர்களது பிள்ளைகள் ஆகியோரின் உரிமைகளும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
மொத்தத்தில், தாய், தாத்தா ஆகியோரின் சொத்துகளில் மகள்கள் மற்றும் பேரவிகளுக்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலாக, அது அந்த சொத்து எப்படியெல்லாம் வந்தது, உயில் எழுதியுள்ளாரா, வாரிசுகளின் நிலை என்ன என்பதின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இந்திய சொத்துரிமை சட்டங்கள், வாரிசு உரிமை சட்டங்களில் பல திருத்தங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், உரிமை தொடர்பான விவரங்களை வழக்கறிஞர்களிடம் தெளிவாக ஆலோசித்து செயல்படுவது மிகவும் அவசியம்.