கோயம்புத்தூர் : தாய் கண் முன்பே நடந்த அதிர்ச்சி …. கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பச்சமலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.வீட்டின் அருகே சிறுமி ரோஷினிகுமாரி விளையாடி கொண்டிருந்தபோது சிறுத்தை பாய்ந்து கவ்விச் சென்றுள்ளது.
இதை நேரில் கண்ட தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7
பஞ்சாபுக்கு தண்ணீர் வழங்குவதை ஏற்க முடியாது… உமர் அப்துல்லா கண்டனம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பஞ்சாப்புக்கு தண்ணீர் வழங்குவதை ஏற்க முடியாது என முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார். இதனால் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்து இருந்தார். இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் கூறி வருகிறது.
இந்நிலையில், ஒப்பந்தம் ரத்தானதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நீர் செல்வதை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானுக்கு திருப்பி விட மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக கடந்த மாதம் செய்தி வெளியானது. இதற்காக கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:
பஞ்சாப்புக்கு ஏன் தண்ணீர் தர வேண்டும்.இதனை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். எங்களது தண்ணீர் முதலில் எங்கள் பயன்பாட்டிற்கு தான். ஜம்முவில் வறட்சி போன்ற சூழ்நிலை நிலவுகிறது. அப்படி இருக்கும்போது பஞ்சாப்புக்கு ஏன் தண்ணீர் அனுப்ப வேண்டும். அம்மாநிலம் ஏற்கனவே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீரை பெற்று வருகிறது.
எங்களுக்கு தேவையாக இருக்கும்போது அவர்கள் தண்ணீரை தரவில்லை. எங்களை பல ஆண்டுகளாக அழ வைத்தனர். தற்போதைக்கு தண்ணீர் எங்களுக்கு. நாங்கள் முதலில் பயன்படுத்துகிறோம். பிறகு மற்றவர்களை பற்றி யோசிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், தண்ணீர், உமர் அப்துல்லா, எதிர்ப்பு, பரபரப்பு, Punjab, Jammu and Kashmir, water, Omar Abdullah, protest, agitation,.