மதுரை: மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு… மதுரை அருகே தைலம் டப்பாவை குழந்தை விழுங்கியது. இதை லாவகமாக வெளியே எடுத்த மருத்துவக் குழுவினரை பொதுமக்கள் பாராட்டினர்.
மதுரையடுத்த திருமங்கலத்தில் தைலம் டப்பாவை விழுங்கிய இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டப்பாவை 15 நிமிட போராட்டத்திற்குப் பின்னர் மருத்துவர் உதவியுடன் பத்திரமாக வெளியே எடுத்தனர்.
ஹசீனா பானு என்பவரின் இரண்டரை வயது பெண் குழந்தை விளையாடும்போது தைல டப்பாவை எடுத்து விழுங்கியது. மருத்துவக் குழுவினர் மிகவும் லாவகமாக தைல டப்பாவை வெளியே எடுத்து குழந்தையை மீட்டனர். மருத்துவர் சிவகரன், செவிலியர்கள், ஊழியர்களுக்கு பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.