ஒரத்தநாடு : பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் இன்று லட்சக்கணக்கான பட்டதாரிகள் உள்ளனர் என்றால் அதற்க்கு ஊக்கமளித்து வழிவகுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான்என்று உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 4வது பட்டமேற்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்..
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோவி.செழியன்,
இன்றைய பட்டமேற்பு விழாவில் இளநிலை பிரிவில் 819 மாணவிகளும், முதுநிலை பிரிவில் 130 மாணவிகளும் என மொத்தம் 949 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
1180 முதல் தலைமுறை பட்டதாரிகள், 712 மாணவிகளுக்கு SC ST கல்வி உதவித்தொகை, 2345 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000/- மும், 2407 மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டம் என்ற முதல்வரின் உன்னதத் திட்டம் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி, 1191 மாணவிகளுக்கு BC, MBC கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றவர்..
பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் உள்ளனர் என்றால் அதற்க்கு ஊக்கமளித்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் என்றவர், கல்வியை பொதுவுடமையாக்க வேண்டும் என்ற தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் என்னங்களை நடைமுறை படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் தான் காரணம் என்றார்..