சென்னை: துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்கலைகழக அதிகாரிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்வி உதவித் தொகையாக ரூ.80 கோடியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை விரைவாக வழங்குதல்.
உரிய காலத்தில் வழங்கப்படாத பதவி உயர்வை வழங்க வேண்டும். காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், நிர்வாகப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கையெழுத்து இல்லாத பட்டம் செல்லாது: போட்டி குறித்து நிர்வாகிகள் பாலு, காளி, கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி மானிய நிதியாக தமிழக அரசு சார்பில் சென்னை பல்கலைக்கு வழங்க வேண்டிய 80 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பணிகள் முடங்கியுள்ளன. இந்நிலை நீடித்தால் பல்கலைக்கழகத்தின் கல்விச் சூழல் பெரிதும் பாதிக்கப்படும்.
துணைவேந்தர் பதவி ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. இதனால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் எழுந்துள்ளன. வரும் 24-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது. எனவே துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.