குமரி: 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து செய்ய வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். என்பது உள்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலக ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிகள் புறக்கணிப்பால் அலுவலகம் முற்றிலுமாக முடங்கியது. மேலும் அகஸ்தீஸ்வரம், தோவாளை , ராஜாக்கமங்கலம், மேல்புறம் உள்பட மாவட்டத்தில் உள்ள 9 வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 400-க்கு மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.