சென்னை: வானத்தில் `வெள்ளி கிரகம்’ நாளை பிரகாசமாக ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானத்தில் நாளை (24-ந்தேதி) வீனஸ்கிரகம் எனப்படும் வெள்ளி மிகவும் பிரகாசமாக காணப்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். வெள்ளி நாளை பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருகிறது.
அப்போது வெள்ளியானது 4.4 மேக்னிட்யூட் அளவு வெளிச்சத்துடன் காணப்படும். நாளை சூரிய உதயத்துக்கு முன்பு நிலவுக்கு அருகே வெள்ளி கிரகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
மீண்டும் அடுத்த செப்டம்பர் மாதம் தான் வெள்ளியை இது போன்று பிரகாசமாக பார்க்க முடியும்.