சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது. பொதுவாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும். சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். பொதுவாக காலையில் லேசான பனிமூட்டம் நிலவும். நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.
பொதுவாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பிப்.17 முதல் 20 வரை வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக காலையில் லேசான பனிமூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.