செங்கம்: செங்கம் அருகே கார்த்திகை தீப பண்டிகையையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலையில் சிறப்பாகக் கருதப்படும் அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அனைத்து வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.
தொடர்ந்து 3 நாட்கள் வீடுகளில் தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபாவளியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், “செங்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது குக்கர் உள்ளிட்ட பாத்திரங்களை சமைப்பதை நிறுத்திவிட்டு, மீண்டும் மண் பாத்திரங்களையே பயன்படுத்த துவங்கியுள்ளனர் பலர். இதற்காக, பருப்பு சட்டி, பானை, ஸ்பூன், டம்ளர், பூந்தொட்டி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது தீபாவளியையொட்டி செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கையால் சுமார் 2 லட்சம் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது.
ஆனால் மக்கள் வாங்குவதை குறைத்து, அகல் விளக்குகளை வாங்குகின்றனர். இதனால் கையால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் விற்பனை சில ஆண்டுகளாக மந்தமாகவே உள்ளது. ஆனால், மண்பாண்டத் தொழிலாளர்களின் நலனுக்காக ஏரி, குளங்களில் மண் அள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளதை வரவேற்கிறோம். எங்கள் நலன் காக்க சில சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.