கிண்டி: மாஸ்க் அணிவது கட்டாயமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் என்ன தெரியுங்களா?
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக எந்த நோய் தொற்றும் பரவவில்லை.
மாஸ்க் அணிவது கட்டாயம் போன்ற பதற்றமான நிலை எதுவும் இல்லை. சுகாதாரமற்ற நீர்நிலைகள் மூலம் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று ஏற்படுகிறது.
தமிழகத்தில் தற்போது பருவமழை கால நோய் தொற்று பாதிப்புதான் உள்ளது. பதற்றம் தேவையில்லை. மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.
ஜி.எஸ்.டி. வரியை முன்பு உயர்த்தியதும் பா.ஜ.க. அரசு தான், தற்போது குறைத்ததும் பா.ஜ.க. அரசு தான் என்றார்.