சென்னை: சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தின் வருகைப் பகுதியில் உள்ள பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண் வாயிலில் உள்ள 2 கண்ணாடி கதவுகளுக்கு வெளியே ஒரு கண்ணாடி கதவு (7 அடி உயரம், 3 அடி அகலம்) திடீரென உடைந்து ஆபத்தான நிலையில் தொங்கியது.
இதை பார்த்த பயணிகள் அந்த வழியாக செல்ல பயந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் விரைந்து வந்து அந்த வாயிலை யாரும் கடந்து செல்ல முடியாதபடி டேப் மூலம் அடைத்தனர்.
அனைத்து பயணிகளும் உள்நாட்டு முனையத்திற்குள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. உடைந்த கண்ணாடி கதவு அகற்றப்பட்டு, மற்றொரு கண்ணாடி கதவு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி கதவு எப்படி உடைந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.