சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் மீது எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தவில்லை. இந்த சம்பவத்திற்கு அவர் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அவரை விமர்சிக்கிறோம்.
இதில் அரசியல் செய்வது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்தான். விஜய்யை தனது பிடியில் சிக்க வைக்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சதி மற்றும் சூழ்ச்சி அரசியல் சக்திகளிடம் அவர் சிக்கினால், அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்; விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளில் நான் திருப்தி அடைகிறேன். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டதையும் நாங்கள் வரவேற்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.