திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான உற்சவம் வரும் 12-ம் தேதி அதிகாலை 3.21 மணிக்கு தொடங்கி 13-ம் தேதி அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே வரும் 12-ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்ததாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யவும், நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். மேலும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே வழக்கம் போல் சிறப்பு ரயில்களும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.