சென்னை: ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழி வயதை குறிப்பது இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்தி தேவி பாண்டவர்களுடன், கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது கர்ணன் சொன்னது தான் இந்த பழமொழியின் அர்த்தம்.
அப்போது கர்ணன், பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கௌரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம் என்று கூறினார். அதாவது ஐந்து பே௫டன் ஆறாவதாகத் சேர்ந்தாலும் சாவு தான். நூறு கௌரவர்களுடன் சேர்ந்தாலும் சாவு தான் என்பது தான் அது.
ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது. எனவே பழமொழியை அர்த்தம் தெரிந்து பயன்படுத்த வேண்டும்.