சென்னை: வங்காள விரிகுடாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நேற்று 12 மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று வெப்பநிலை இயல்பை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.