சென்னை: சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நவராத்திரி, ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை குறிவைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.
சென்னை – மதுரை இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.4,200 ஆக இருந்தது, தற்போது ரூ.12,026ல் இருந்து ரூ.18,626 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை – தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.5006-ல் இருந்து ரூ.11,736-ல் இருந்து ரூ.13,626 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை – கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை – சேலம் இடையே வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3317-ல் இருந்து ரூ.10,792 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.