Content:
சென்னை: பான் கார்டு (PAN Card) என்பது இந்திய வருமானவரி துறையால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள அட்டை ஆகும். இது வங்கிகளில் கணக்கு திறக்க, வருமானவரி செலுத்த, கடன் பெற, பங்கு வாங்க மற்றும் அரசு சேவைகளை பெற அவசியமான ஆவணம். பான் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், தந்தையின் பெயர், புகைப்படம் போன்ற விவரங்கள் இடம் பெறும்.

ஒருவேளை பான் கார்டில் ஏதேனும் பிழை இருந்தால், அது உடனே திருத்திக்கொள்ள வேண்டும். புதிய பான் விண்ணப்பிக்கவும், திருத்தங்களும் செய்யவும் NSDL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, ‘Changes or Correction in Existing PAN card’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் டிஜிட்டல் கையெழுத்து போன்ற ஆவணங்களை பதிவேற்றி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
சேவை கட்டணம் ரூ.110 செலுத்தி ஆன்லைனில் படிவத்தை சமர்ப்பித்தால், திருத்தப்பட்ட புதிய பான் கார்டு வீட்டிற்கு அனுப்பப்படும். இந்த முறையை பின்பற்றி பான் கார்டை எளிதாக புதுப்பிக்க முடியும்.
பான் கார்டில் உள்ள விவரங்களை சரியாக வைத்திருப்பது வங்கி, அரசு மற்றும் நிதி சேவைகளில் சிக்கலில்லாமல் செயல்பட உதவும். ஆன்லைனில் திருத்தம் செய்வது வேகமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது, இதனால் நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.