சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று காலை 10.56 மணி, காலை 11.40 மணி மற்றும் மதியம் 12.28 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும்.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே மதியம் 12.00 மணி, மதியம் 1.10 மணி மற்றும் மதியம் 1.45 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும்.
இன்று பிற்பகல் 2.20 மணிக்கு இயக்கப்படவிருந்த செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்டத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.